Published : 21 Nov 2020 02:38 PM
Last Updated : 21 Nov 2020 02:38 PM
மத்திய அரசின் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் தனி நுழைவுத் தேர்வான இனி- செட் தேர்வு முடிவுகள் நவ.27-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர் உள்ளிட்ட 11 கல்லூரிகளில், 2021-ல் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு இந்த ஆண்டில் இருந்து தனி நுழைவுத் தேர்வு (இனி - செட்) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் நேற்று (நவ.20) நடைபெற்றது. கணினியில் நடைபெற்ற இத்தேர்வு 121 நகர்ங்களில் காலை 9 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிவடைந்தது.
முதுகலை மருத்துவப் படிப்புகளான எம்.எஸ்., எம்டி., எம்.எச்., டி.எம்., எம்.சிஎச்., எம்.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்காக இனி செட் தேர்வு நடத்தப்பட்டது.
இதற்கான முடிவுகள் நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் aiimsexams.org என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
நீட் தேர்வைத் தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வரும் நிலையில், இனி-செட் தேர்வை எய்ம்ஸ் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT