Last Updated : 17 Nov, 2020 02:23 PM

1  

Published : 17 Nov 2020 02:23 PM
Last Updated : 17 Nov 2020 02:23 PM

7.5% உள் ஒதுக்கீடு: மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற கோவை அரசுப் பள்ளி மாணவர்கள்

கோவை

மருத்துவப் படிப்புகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில், கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டார். இதில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 21 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களின் நீட் மதிப்பெண், ஒட்டுமொத்தத் தரவரிசை மற்றும் இன சுழற்சித் தரவரிசை விவரம்:

கோவை ஆர்எஸ் புரம் மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெ.தாரணி 461-22-10,
செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ஸ்ரீதேவி 450-25-11,
சிங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.துர்காதேவி 366-58-18,
பொள்ளாச்சி நகரவைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.அர்ச்சனா 340-72-2,
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.குணவர்த்தினி 259-136-43.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் என்.அன்பரசன் 235-176-1,
அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் என்.கோகுலன் 217-203-74,
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி புனிதா தனுஷ்யா 228-208-75,
எஸ்எஸ் குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.ஜீவா 288-185-63,
வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி. பிஸ்டிஸ் பிரிஸ்கா 167-366-73.

எஸ்ஆர்பி அம்மணியம்மாள் பள்ளி மாணவி வி.ஹேமலதா 160-412-142,
சமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.யுவன்ராஜ் 155-450-81,
அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வி.பூங்கொடி 152-467-180,
வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ரம்யா 145-525-6,
ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.ஸ்வேதா பாக்கியம் 142-544-97.

மேட்டுப்பாளையம் நகரவைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஆரிஃபா தஸ்லீமா 135-622-29,
ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.தரணிபிரியா 130-681-33,
தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.சக்திவேல் 121-787-263,
தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பி.லோகேஸ்வரி 115-913-310, பி.சுருதி 113-937-327,
பொள்ளாச்சி நகரவைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்.சித்ரா 114-932-53.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x