Published : 09 Nov 2020 05:39 PM
Last Updated : 09 Nov 2020 05:39 PM

கரோனாவுக்குப் பிறகான வேலைவாய்ப்பு, தொழில் போக்கு குறித்த ஆன்லைன் கருத்தரங்கம்: ஏஐசிடிஇ நடத்துகிறது

கரோனாவுக்குப் பிறகான வேலைவாய்ப்பு, தொழில் போக்கு குறித்த ஆன்லைன் கருத்தரங்கத்தை ஏஐசிடிஇ நடத்துகிறது.

கோவிட்-19 எனப்படும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான இறுதியாண்டு மாணவர்கள் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.

மருத்துவம், உயிர் வேதியியல், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மற்றும் சத்தீஸ்கர் ஸ்வாமி விவேகானந்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இணைந்து கோவிட் 19-க்குப் பிறகான வேலைவாய்ப்பு, தொழில் போக்கு குறித்த 3 மணி நேரக் கருத்தரங்கத்தை நடத்துகின்றன.

நவ.11-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்தக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் ஏஐசிடிஇ உடன் தேசியத் திட்ட அமலாக்கப் பிரிவு மற்றும் ஐசிடி அகாடமி ஆகியவை பங்கேற்கின்றன.

இந்தக் கருத்தரங்கத்தில் ஏஐசிடிஇ துணைத் தலைவர் பேராசிரியர் பூனியா தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். சத்தீஸ்கர் ஸ்வாமி விவேகானந்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வர்மாவும் பங்கேற்கிறார். இவர்களுடன் ஏஐசிடிஇ துணை இயக்குநர் முனைவர் நீது பகத் மற்றும் பல நிபுணர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளனர்.

ஆர்வமுள்ள நபர்கள், இந்த ஆன்லைன் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்துகொண்டு பங்கேற்றுப் பயன்பெறலாம்.

பதிவு செய்ய: https://t.co/DTAeOKc224?amp=1

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x