Published : 05 Nov 2020 02:31 PM
Last Updated : 05 Nov 2020 02:31 PM
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க என்னென்ன சான்றுகள் தேவை என்பது குறித்த தகவல்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் நவ.3-ம் தேதி முதல் இணையம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். நவ.12-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க என்னென்ன சான்றிதழ்கள் தேவை என்பது குறித்த தகவல்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* பள்ளி மாற்றுச் சான்றிதழ்
* இருப்பிடச் சான்றிதழ்
* அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கோர உறுதிச் சான்றிதழ் (தேவைப்படுவோருக்கு மட்டும்)
* சாதிச் சான்றிதழ்
* பெற்றோரின் அடையாள அட்டை (ரேஷன் அல்லது ஆதார் அட்டை)
* 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
* 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளி சான்றிதழ்
* நீட் மதிப்பெண் அட்டை
* நீட் அனுமதிச் சீட்டு
* முதல் தலைமுறைப் பட்டதாரிக்கான சான்றிதழ் (தேவைப்படுவோருக்கு மட்டும்)
* சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ்
* வருமானச் சான்றிதழ் (தேவைப்படுவோருக்கு மட்டும்)
* புகைப்படம்
* 11-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (மாநிலப் பள்ளிக்கல்வி வாரியத்தில் படித்தவர்களுக்கு மட்டும், பிற வாரியங்களுக்குத் தேவையில்லை)
* பல்கலைக்கழகத் தகுதிச் சான்றிதழ் (மாநிலப் பள்ளிக்கல்வி வாரியத்தில் படித்தவர்களுக்குத் தேவையில்லை, பிற வாரியங்களுக்கு மட்டும்)
மாணவர்கள் அரசு ஒதுக்கீடு மற்றும் தனியார் ஒதுக்கீட்டுக்கு https://tnmedicalonline.xyz/ug/mbbs_bds/index.aspx என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்
கூடுதல் விவரங்களுக்கு: http://tnmedicalselection.net/news/02112020234138.pdf
தொலைபேசி எண்கள்:
1. 044-28364822
2. 9884224648
3. 9884224649
4. 9884224745
5. 9884224746
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT