Last Updated : 05 Nov, 2020 02:00 PM

 

Published : 05 Nov 2020 02:00 PM
Last Updated : 05 Nov 2020 02:00 PM

சாலைப் பள்ளி; மகள்களை 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு அழைத்துச்சென்ற பெற்றோர்

ஹைதராபாத்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெற்றோர், 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு தனது இரட்டை மகள்களை அழைத்துச் சென்றதுடன் சாலைப் பள்ளிக் கல்வியையும் கற்பித்துள்ளனர்.

கல்வி முறையில் பள்ளி சென்று படிப்பது, வீட்டிலேயே கற்றல் உள்ளிட்ட நடைமுறைகளோடு சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறையும் தற்போது பிரபலமாகி வருகிறது. குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ள விரும்பும் பெற்றோர், அதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை இதன்மூலம் உறுதி செய்ய முடியும்.

அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கங்காதர் என்னும் தம்பதி, 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு தனது இரட்டை மகள்களை அழைத்துச் சென்றதுடன் சாலைப் பள்ளிக் கல்வி முறையையும் கற்பித்துள்ளனர்.

இதுகுறித்து 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்திடம் பேசிய கங்காதர், ''இதற்காக 13,000 கி.மீ. பயணித்தோம். கார்ப்பரேட் துறையில் 17 வருடங்கள் பணியாற்றினாலும் பயணத்தின் மீதே எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. 2018-ல் வேலையை விட்டுவிட்டு, 2019-ல் வடகிழக்கு இந்தியா முழுவதும் 7 மாதங்கள் பயணம் செய்தேன்.

என் மனைவிக்கும் பயணத்தில் அதிக ஆர்வம் உண்டு. இரட்டை மகள்கள் பிறந்ததும் 6 மாதக் குழந்தைகளாக இருக்கும்போது முதல்முறையாகப் பயணித்தோம். தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாலைப் பள்ளிக் கல்வி முறைக்காகப் பயணித்தோம். பெற்றோர்களாலோ ஆசிரியர்களாலோ கற்பிக்க முடியாததைப் பயணம் கற்றுக் கொடுக்கும். 4 சுவர்களுக்குள் கற்கும் கல்வியும் அறிவும் என்னைப் பொறுத்தவரையில் சரியாக இருக்காது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x