Last Updated : 31 Oct, 2020 12:50 PM

3  

Published : 31 Oct 2020 12:50 PM
Last Updated : 31 Oct 2020 12:50 PM

குறைவான பள்ளி இடைநிற்றல் விகிதம்; மேற்கு வங்கம் முதலிடம்: என்ன காரணம்?

2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் மேற்கு வங்கத்தில் குறைவாக உள்ளதாக ஏஎஸ்இஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

விளிம்புநிலைக் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி அறக்கட்டளை பிரதம். இந்த அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கல்வி தொடர்பான ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த முறை 26 மாநிலங்களில் 584 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அங்குள்ள 16,974 கிராமங்களில் 52,227 குடும்பங்களிடம் ஆய்வு நடைபெற்றது.

அந்த வகையில் ஆண்டு மாநிலக் கல்வி அறிக்கை (ஏஎஸ்இஆர்) அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''தேசிய இடைநிற்றல் விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 3.3 சதவீதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பெரிய மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் இடைநிற்றல் விகிதம் முறையே 11.3 சதவீதம், 14 சதவீதம் மற்றும் 14.9% ஆக உள்ளது.

அதேபோல மேற்கு வங்கத்தில் 99.7 சதவீத மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிராவில் புத்தக விநியோகம் முறையே 79.6 சதவீதம், 60.4 சதவீதம், 95 சதவீதம், 34.6 சதவீதம், 80.8 சதவீதமாக உள்ளது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்குவங்கப் பாடத்திட்டக் குழுத் தலைவர் அவீக் மஜூம்தார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''பெண் குழந்தைகள் உட்பட எந்தவொரு குழந்தையும் பண நெருக்கடியால் படிப்பைக் கைவிட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டோம். இதற்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை வழங்கினோம். இதுவே இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறையக் காரணமாக இருந்தது.

பெருந்தொற்றுக் காலத்தின்போதும் மாநிலப் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்குப் பாட உபகரணங்களை வழங்கி வருகிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x