Published : 27 Oct 2020 07:00 AM
Last Updated : 27 Oct 2020 07:00 AM

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை.யில் இணையவழி பட்டப் படிப்புகள் தொடக்கம்

கே.எஸ். அகாடமியுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த சான்றிதழை பரிமாறிக்கொள்ளும் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.வைத்தியசுப்ரமணியம்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணையவழியில் பட்டப் படிப்புகள் நேற்று தொடங்கப்பட்டன.

இதுகுறித்து பல்கலைக்கழக இணையவழி மற்றும் தொலைநிலைக் கல்வித் துறைஇயக்குநர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் யூஜிசி இணையவழி விதிமுறைகளின்படி, இணையவழியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளை நேற்று அறிமுகப்படுத்தியது.

பலவிதமான கற்றல் முறைகளை விரும்பும் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப இந்தப்பட்டப் படிப்புகள் இருக்கும்.பி.காம். பட்டப் படிப்பு புகழ்பெற்றசி.ஏ. பயிற்சி அகாடமியுடன் இணைந்திருப்பதால், பி.காம்.பயிலும் மாணவர்களுக்கு பி.காமும், கே.எஸ். அகாடமி வழங்கும் அடித்தள இடை இறுதிப்பயிற்சியும் என இரட்டை முறை பலன் கிடைக்கும்.

இதேபோல பி.பி.ஏ. லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்பு மத்திய திறன் மற்றும்தொழில்முனைவோர் அமைச்சகத்தின் லாஜிஸ்டிக் திறன் கவுன்சிலுடன் இணைந்து லாஜிஸ்டிக் துறையின் திறனை வளர்க்கும் முறையை வழங்குகிறது.

யூஜிசி பரிந்துரைத்த பல்வேறு விதிமுறைகள் மற்றும் தரத்துடன் இணக்கமான ‘மூக்'(MOOC) தளத்தைப் பயன்படுத்தி சாஸ்த்ராவின் ஆசிரியர்களும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி வல்லுநர்கள் இத்திட்டங்களை வழங்குகின்றனர்.

இந்தப் பாடத் திட்டங்களுக்கான இணையவழி பதிவுwww.sastra.edu என்ற இணையதளத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. டிச.31-ம் தேதி வரை தொடரும். இணையவழி சேர்க்கைக்கு பிறகு வகுப்புகள் 2021, ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x