Published : 25 Oct 2020 06:37 AM
Last Updated : 25 Oct 2020 06:37 AM

பொறியியல் கலந்தாய்வில் 89,000 இடங்கள் காலியாக வாய்ப்பு

சென்னை

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 89 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த அக்.1-ம் தேதி தொடங்கி இணையவழியில் நடந்து வருகிறது.

அதன்படி, அக்.1 முதல் 6-ம் தேதி வரை நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 497 இடங்கள் நிரம்பின. இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்.8-ல் தொடங்கியது. இதன் முதல் சுற்றில் 7,510 இடங்கள், 2-வது சுற்றில் 13,415 இடங்கள் நிரம்பின.

இதையடுத்து, 3-ம் சுற்று கலந்தாய்வு அக்.16-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 35,133 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 20,999 மாணவர்கள் மட்டுமே இடங்களை உறுதிசெய்துள்ளனர். 3 சுற்று கலந்தாய்வு முடிவில் இதுவரை 43,367 இடங்களே நிரம்பியுள்ளன.

இதைத் தொடர்ந்து, 4-வது சுற்று கலந்தாய்வு அக்.28-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க 40,573 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், நடப்பு ஆண்டில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும் சூழல் நிலவுவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2019 மாணவர் சேர்க்கையின்போது, 479 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 72,940 இடங்கள் இருந்தன. கலந்தாய்வு முடிவில் 83,396 இடங்கள் நிரம்பின. 89,544 இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x