Published : 23 Oct 2020 07:11 PM
Last Updated : 23 Oct 2020 07:11 PM
நாமக்கல் அரசு ஐடிஐயில் உதவித் தொகையோடு கூடிய படிப்பில் மாணவர்கள் சேர மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு, 10-ம் வகுப்புத் தேர்ச்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ பெற்ற மாணவ, மாணவியர்களிடம் இருந்து www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
இரண்டு ஆண்டுப் படிப்பாக ஃபிட்டர், ஓராண்டுப் படிப்பாக மெக்கானிக் டீசல் தொழிற்பிரிவுகள் காலியாக உள்ளன. இவற்றுக்குப் பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அத்துடன் மாதம் ரு.500 உதவித்தொகை வழங்கப்படும்
மேலும் லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடை, வரைபடக் கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 04286 -247472, 84895 55073, 94990 55846, 98433 28575 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT