Last Updated : 22 Oct, 2020 04:40 PM

 

Published : 22 Oct 2020 04:40 PM
Last Updated : 22 Oct 2020 04:40 PM

கேரளாவில் 18 திருநங்கைகள் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ச்சி: மாநில எழுத்தறிவு இயக்கம் முன்னெடுப்பு

திருவனந்தபுரம்

மாநில எழுத்தறிவு இயக்கத்தின் முன்னெடுப்பால், கேரளாவில் திருநங்கைகள் 18 பேர், 12-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் சமன்வயா திட்டத்தின் கீழ் கல்வி பெற்றுள்ளனர். இத்திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் 4 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகையோடு இலவசமாகக் கற்பித்தலை நிகழ்த்துவது ஆகும்.

இதன்படி 10-ம் வகுப்புக்கு இணையாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெறுவர். இதுவே 12-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் வென்றோருக்கு மாதந்தோறும் ரூ.1,250 உதவித் தொகை கிடைக்கும். அவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் 22 திருநங்கைகள் தேர்வெழுதியதில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பத்தினம்திட்டாவில் 8 திருநங்கைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சமன்வயா திட்டத்தின் கீழ் இதுவரை 39 திருநங்கைகளுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. 30 திருநங்கைகள் 10-ம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 62 திருநங்கைகள் 12-ம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் திட்ட இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலா, தேர்ச்சி பெற்ற திருநங்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x