Published : 09 Oct 2020 07:15 AM
Last Updated : 09 Oct 2020 07:15 AM
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ எனும் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சியின் 4-ம் அமர்வு இன்று(வெள்ளி) தொடங்கி, 3 நாட்கள் ஆன்லைனில் நடக்க உள்ளது.
முதல் நாளான இன்று விசாகப்பட்டினம் ஜிஐடிஎஎம் பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் ஆய்வு முதன்மை பிரிவின் இதயம், தொராசிக் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் பிரதீப் குமார், ‘எய்ம்ஸ்: கல்வி மற்றும் ஆய்வு வாய்ப்புகள், மொத்த செயற்கை இதய ஆய்வுகள்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
நாளை (சனி) ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளரும், டிஆர்டிஓ இயக்குநருமான டாக்டர்வி.டில்லிபாபு, ‘மருத்துவம் மற்றும்பொறியியல்: கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், 3-ம் நாள் (ஞாயிறு) சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநரும், என்டிஆர்எஃப் தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ‘தொழில் விருப்பமாக ஆராய்ச்சி: வழிகள் மற்றும் வழிமுறைகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.
8 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பங்கேற்க கட்டணம் கிடையாது. மாலை 6 முதல் 7 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும்.
இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம். சிறந்த கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு மயில்சாமிஅண்ணாதுரை கையெழுத்திட்ட, ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய‘அடுத்த கலாம்’ நூல் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT