Published : 06 Oct 2020 07:44 AM
Last Updated : 06 Oct 2020 07:44 AM

கால்நடை மருத்துவ படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க அக். 9-ம் தேதி கடைசி நாள்

சென்னை

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக். 9-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு(பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் பட்டப்படிப்புகள் (பி.டெக்) இருக்கின்றன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்தப் படிப்புகளுக்கு 2020 - 21-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஆக. 28-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பது செப். 28-ம்தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் அக். 9-ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்ஆர்ஐ மாணவர்கள் அக். 23-ம் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் 4 நாட்களே இருப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x