Published : 28 Sep 2020 08:41 AM
Last Updated : 28 Sep 2020 08:41 AM

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 34 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கல்

சென்னை

செப்டம்பர் மாதத்தில் இதுவரை 34 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 43,283 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வந்தன. இவற்றின் மூலம் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வந்த 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டதால் சத்துணவு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சத்துணவில் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா 10 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சிலவாரங்களுக்கு முன்பு சத்துணவில் முட்டை வழங்கும் பணிதொடங்கப்பட்டது. இதுவரை 34 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டுள்ளது.

உலர் உணவு பொருட்கள்

இதுதொடர்பாக, சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "சத்துணவில் செப்டம்பர்மாதத்துக்கான ஒதுக்கீடாக இதுவரை 34 லட்சம் மாணவர்களுக்கு தலா 10 முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன்சேர்த்து இம்மாதத்துக்கான உலர் உணவு பொருட்கள்வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாணவர்களுக்கும் இம்மாத ஒதுக்கீடான உலர் உணவு பொருட்கள் மற்றும் முட்டை வழங்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x