

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் தொடர்ந்து முன்னெ டுத்து வருகிறது.
அந்த வகையில், ‘வாயுசாஸ்த்ரா ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘விமான அறிவியல்’ குறித்த ஆன்லைன் பயிற்சி பட்டறையை வரும் அக்.5-ம் தேதி தொடங்கி,தொடர்ந்து 10 நாட்களுக்கு நடத்தவுள்ளது.
இந்தப் பயிற்சியை ‘வாயுசாஸ்த்ரா ஏரோஸ்பேஸ்’ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெகதீஷ் கண்ணா வழங்கஉள்ளார். சென்னை வட்டத்தில் புகழ்பெற்ற நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான இவர்,ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் முதுகலை பட்டம் பெற்றவர். ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஆர்டிபிஐ இன்குபேட்டட் அண்ட் ஃப்ண்டட் ஸ்டார்டப் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது இந்நிறுவனம்.
இதுவரை 8-க்கும் மேற்பட்டநாடுகளைச் சேர்ந்த 1,600-க்கும்மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளிடம் விண்வெளி பற்றியவிழிப்புணர்வை இந்நிறுவனத்தினர் கொண்டு சென்றுள்ளனர்.
3 குழுக்களாக பங்கேற்பு
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் 6, 7 வயதுள்ள குழந்தைகள் ஒரு குழுவாகவும், 9 மற்றும் 10 வயதுள்ள குழந்தைகள் ஒரு குழுவாகவும், 11 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் ஒரு குழுவாகவும் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1,062/- பதிவுக் கட்டணமாகச் செலுத்தி, https://connect.hindutamil.in/event/38-air-science.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 9003196509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.