Last Updated : 23 Sep, 2020 06:34 PM

1  

Published : 23 Sep 2020 06:34 PM
Last Updated : 23 Sep 2020 06:34 PM

கரோனாவால் வீட்டில் முடங்கிய 10 கிராம மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர்

சிவகங்கை

சிவகங்கை அருகே கரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிய 10 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் ஆங்கிலம் பேச்சு பயிற்சி அளித்து வருகிறார்.

கரோனா ஊரடங்கால் 6 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் இணையதள வகுப்பு மூலம் பயின்று வருகின்றனர். ஆனால் இணையதள வசதி இல்லாத மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க வசதியின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதையடுத்து கிராமப்புறங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளித்து வருகிறார் எஸ்.புதூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஏ. பாலகுருநாதன்.

அவர் தனது சொந்த ஊரான சிவகங்கை அருகே வீராணி மற்றும் அதை சுற்றியுள்ள அல்லூர், பனங்காடி, விஜயமாணிக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு பனங்காடியில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் காலை 8 முதல் 9.30 மணி வரை பயிற்சி அளிக்கிறார்.

மேலும் மாணவர்களுக்கு முககவசம், கிருமிநாசினி, கபசுரக்குடிநீர், ஊட்டசத்து நிறைந்த பயறுகள் போன்றவற்றையும் இலவசமாக வழங்குகிறார். அவரது செயல்பாட்டை கிராமமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஏ.பாலகுருநாதன் கூறுகையில், ‘‘ மாணவர்கள் வீட்டிலேயே முடங்கினால் படிப்பின் மீது ஆர்வம் குறையும். மேலும் கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலம் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.

இதனால் கடந்த 2 மாதங்களாக ஆங்கிலம் பேச்சு பயிற்சி அளித்து வருகிறேன். பயிற்சி பெற்ற பலரும் தற்போது சரளமாக ஆங்கிலம் பேசுகின்றனர்,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x