Published : 14 Sep 2020 08:11 AM
Last Updated : 14 Sep 2020 08:11 AM
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை (செப்.15) வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.21 முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் செப்.15-ம் தேதி முதல் ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேநேரம் விண்ணப்ப எண்ணை தவறவிட்டவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் ஹால்டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்ட தேர்வு மையத்தில் செப்.17, 18-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT