Published : 14 Sep 2020 06:38 AM
Last Updated : 14 Sep 2020 06:38 AM
இளநிலை மருத்துவ படிப்புகளுக் கான நாடுமுழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வை மாணவர்கள் உற்சாகத் துடன் எழுதினர். கேள்விகள் எளிமையாக இருந்ததாக அவர்கள் தெரி வித்தனர். இம்மாத இறுதியில் தேர்வு முடிவு வெளியாகிறது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21 கல்வி ஆண்டில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க் கைக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடப்பதாக இருந்தது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததால் 2 முறை தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, செப்டம்பர் 13-ம் தேதி தேர்வு நடக்கும் என தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறி வித்தது. நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி மாணவர்கள் மற்றும் சில மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளு படி செய்த உச்ச நீதிமன்றம், தேர்வை நடத்தலாம் என அனுமதி அளித்தது. இதையடுத்து, திட்ட மிட்டபடி நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடத்தப்பட்டது. 154 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 3,842 மையங்களில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடந்தது. நாடுமுழுவதும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 15 லட்சத்து 97,433 பேரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் 14 நகரங்களில் 238 மையங்களில் தேர்வு நடந்தது. விண்ணப்பித்திருந்த 1 லட்சத்து 17,990 பேரில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்ற னர். சென்னையில் 46 மையங்களில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.
கரோனா பரவல் இருப்பதால் போதிய இடைவெளியில் மாணவர் கள் அமர வைக்கப்பட்டனர். உடலில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத தனி அறை அமைக்கப்பட் டிருந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங் காளம், உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடந்தது. தமிழ் மொழி யில் தேர்வு எழுத விண்ணப்பித் தவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் மையங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தன.
அனைத்து தேர்வு மையங்களும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. நீட் தேர் வுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக மையங்களில் போலீ ஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மதுரை உள்ளிட்ட சில இடங்களில் போராட்டங்களும் நடந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. தேர்வு முடிவு களை இம்மாதம் இறுதிக்குள் www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட் டுள்ளது.
மாணவர்கள், பகல் 1 மணிக் குள் மையத்துக்கு வந்துவிட வேண் டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பலர் காலை 8 மணி முதலே பெற்றோருடன் வந்தனர். வெளியூர் மாணவர்கள் மையத் துக்கு அருகிலேயே தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளுடன் ஒருநாள் முன்னதாகவே வந்தனர். பகல் 11 மணிக்கு தேர்வு மையங்கள் திறக் கப்பட்டன. முகக்கவசம், கையுறை அணிந்து வந்திருந்த மாணவர்கள் போதிய இடைவெளியில் வரிசை யில் நிற்க வைக்கப்பட்டனர். சானிடைசர் வழங்கப்பட்டதுடன், உடலில் வெப்ப நிலையை கண்டறிய வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், மெட்டல் டிடெக்டர் சோதனை, ஹால்டிக் கெட், அடையாள அட்டை உள் ளிட்ட ஆவணங்கள் சரிப்பார்ப் புக்குப் பின்னரே மாணவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட னர். உள்ளே சென்றதும் ஏற் கெனவே அணிந்திருந்த முகக்கவ சத்தை கழற்றிவிட்டு, அங்கு கொடுக் கப்பட்ட முகக்கவசத்தை மாணவர் கள் அணிந்து கொண்டனர். மாண வர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
கம்மல், மூக்குத்தி அகற்றம்
சோதனையின்போது மாணவர் களிடம் இருந்து மணிபர்ஸ், வாட்ச், கண்ணாடி, தொப்பி போன்றவை யும் மாணவிகளிடம் இருந்து கம்மல், மூக்குத்தி, கொலுசு, செயின், தாலி, மெட்டி போன்றவையும் அகற்றப் பட்டு பெற்றோரிடம் கொடுக்கப்பட் டது. தலையில் இருந்த க்ளிப், கைகளில் கட்டியிருந்த வேண்டுதல் கையிறுகளும் அகற்றப்பட்டன. மாணவர்கள் அணிந்து வந்திருந்த முழுக்கை சட்டைகள் வெட்டி அரைக்கை சட்டையாக மாற்றப்பட் டன. மாணவர்கள் கொண்டு வந்த வண்ண தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு மையத்துக்குள் உணவுப் பொருட்கள் அனுமதிக்கப்படாத தால் காலையிலேயே வந்துவிட்ட மாணவர்கள், பசியுடன் தேர்வு எழுதினர். மாணவர்களுடன் வந்த பெற்றோருக்கு தங்க இடவசதி, குடிநீர், கழிப்பறை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை.
பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார், தனது மகளை மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் சீனியர் செகன்டரி பள்ளி மையத்துக்கு அழைத்து வந்தார்.
தேர்வு எப்படி இருந்தது?
நீட் தேர்வில் இயற்பியல், வேதி யியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில் களில் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப் பெண் என மொத்தம் 720 மதிப் பெண்கள். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக் கப்படும் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள் கூறும்போது, ‘‘தேர்வு எளிமையாக இருந்தது. உயிரியல் பாடத்தில் இருந்து எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட சில கேள்விகள் சற்று கடினமாக இருந்தது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT