Published : 10 Sep 2020 07:54 PM
Last Updated : 10 Sep 2020 07:54 PM
விவேகானந்தரின் லட்சியங்களைப் பிரதிபலிக்கும் புதிய கல்விக் கொள்கை, தேசத்தை அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தர் மனித மேன்மைக்கான நிறுவனத்தின் 21-வது நிறுவன தினக் கொண்டாட்ட விழா இன்று நடைபெற்றது. இதில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் இருந்து காணொலி மூலம் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ''விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டார். மதத் தூய்மை, ஆன்மிக விடுதலை மற்றும் சமுதாயப் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் தேசிய மாற்றத்துக்காக அவர் ஓய்வின்றி உழைத்தார்.
விவேகானந்தரின் லட்சியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேசத்தை அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றும்.
நமது கல்வி முறையில் சிறப்பானவற்றை அடைவதற்கான தேடல், இன்றியமையாத ஓர் அங்கமாக உருவாக்கப்பட வேண்டும்'' என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT