Published : 08 Sep 2020 08:04 PM
Last Updated : 08 Sep 2020 08:04 PM

புதிய கல்விக் கொள்கை: பள்ளிக் கல்விக்காக 13 பேர் கொண்ட குழு அமைப்பு- தமிழக அரசு உத்தரவு

புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் செயல்பட உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அடுத்தாற்போல் 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்தது. இதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சரவை உத்தரவிட்டது.

இதில் உள்ள மும்மொழிக் கொள்கை, பொது நுழைவுத் தேர்வு, தொழிற்கல்வி உள்ளிட்ட அம்சங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. மும்மொழிக் கொள்கையைத் தமிழகம் அனுமதிக்காது என்று தெரிவித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் செயல்பட உள்ளது.

இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள்:
1.பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் ஐஏஎஸ்
2.பூஜா குல்கர்னி ஐஏஎஸ்,
3.லதா ஐஏஎஸ், சமக்ர சிக்‌ஷா மாநிலத் திட்டக்குழு இயக்குநர்
4.கவிதா ராமு ஐஏஎஸ்
5.முனியநாதன் ஐஏஎஸ்
6.அகிலா ராதாகிருஷ்ணன்
7.என்.பஞ்சநாதன்
8.ஜோதிமுருகன்
9.பாலசுப்ரமணியம்
10.மரியஜீனா ஜான்சன்
11.ஆர்.இளங்கோவன்
12.சுந்தரபரிபூரணம் பட்சிராஜன்
13.கே.வி.ஜெயஸ்ரீ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x