Published : 07 Sep 2020 08:06 AM
Last Updated : 07 Sep 2020 08:06 AM
10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக
தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன்படி வேலைவாய்ப்புக்காக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் இவர்கள் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்துக்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. இதற்காக மாதம் ரூ.5,000 தொகுப்புஊதியம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்.
பகுதிநேரமாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகாவது தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பகுதி நேர ஆசிரியர்கள், பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகியும்பணிநிரந்தரம் செய்யப்பட
வில்லை. எனவே பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்ற வேண்
டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT