Published : 05 Sep 2020 07:29 AM
Last Updated : 05 Sep 2020 07:29 AM
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆராய்வதற்கு உயர்கல்வி துறை செயலர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு திமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் இடம் பெற்றுள்ளமும்மொழி திட்டத்தை ஏற்க முடியாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள மற்ற அம்சங்கள் குறித்து ஆராய பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைகள் சார்பில் நிபுணர் குழு அமைக்கப்படும். அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின்படி அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட் டது.
அதன்படி, தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித் துறை செயலர் அபூர்வாதலைமையில் 7 பேர் கொண்டஉயர்நிலைக் குழுவை அமைத்துதமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அக்குழுவில் சென்னை பல்கலை.முன்னாள் துணைவேந்தர்கள் பி.துரைசாமி, எஸ்.பி.தியாகராஜன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலை. துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலை. துணைவேந்தர் எஸ்.தாமரைச் செல்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையைஆராய்ந்து தமிழகத்துக்கு ஏற்புடைய அம்சங்களை மட்டும் பரிந்துரை செய்ய இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தக் குழுவில் ஆசிரியர், மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT