Published : 01 Sep 2020 06:58 AM
Last Updated : 01 Sep 2020 06:58 AM
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 10.5 லட்சம்மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டு பள்ளி மாணவர் சேர்க்கை கடந்த ஆக. 17-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
அதன்படி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 11-ம்வகுப்புகளில் இதுவரை 10.5 லட்சத்துக்கும் (நேற்றைய நிலவரப்படி) அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக தூத்துக்குடியில் 37 ஆயிரம் மாணவர்களும், சென்னையில் 35 ஆயிரம் மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் இறுதிவரை அவகாசம் இருப்பதால் அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT