Published : 25 Aug 2020 05:35 PM
Last Updated : 25 Aug 2020 05:35 PM

11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்: வழிமுறைகள் வெளியீடு

சென்னை

11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 26.08.2020 (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று நோட்டிஃபிகேஷன் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் "Application for Retotalling/ Revaluation" என்ற தலைப்பினை டைப் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 31.08.2020 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 02.09.2020
(புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் தேர்வர் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.505/-

மறுகூட்டல்-II
உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-''

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x