Published : 24 Aug 2020 08:25 AM
Last Updated : 24 Aug 2020 08:25 AM
அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களை பி.எட். கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 109 அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் உள்ளன.இவற்றில் எம்.எட். கல்வித் தகுதியுடன் பணிபுரியும் பேராசிரியர்களை அரசு பி.எட். கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்ய உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன், அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் எம்.எட். உடன் சார்ந்த பாடப் பிரிவில் நெட், ஸ்லெட் அல்லதுபிஎச்டி முடித்த உதவி இணைபேராசிரியர்கள் விவரப் பட்டியலை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மண்டல இணை இயக்குநர்களுக்கு உடனே அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT