Last Updated : 19 Aug, 2020 12:49 PM

5  

Published : 19 Aug 2020 12:49 PM
Last Updated : 19 Aug 2020 12:49 PM

புதிய கல்விக்கொள்கை: பாரம்பரிய, நாட்டுப்புறக் கலைக்கூடம் தொடங்கிய ஐஐடி காரக்பூர்

கொல்கத்தா

புதிய கல்விக் கொள்கையின் அறிவுறுத்தலை அடுத்து ஐஐடி காரக்பூரில் பாரம்பரிய, நாட்டுப்புறக் கலைகளுக்கான கலைக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்வி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஐஐடி காரக்பூர் வளாகத்திலேயே கலைக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் இசை, நுண் கலைகள் மற்றும் பிற நிகழ்த்து கலைகள் கற்றுத் தரப்படும். புதிய கல்விக்கொள்கையின் அறிவுறுத்தலை அடுத்து கண்டுபிடிப்புகள் மற்றும் பலதரப்பட்ட கற்பித்தலைத் தூண்டும் வகையில் கலைக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய இந்துஸ்தானி பாடகரான பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, 100 ராகங்கள் என்ற புது முயற்சியைத் தொடங்கி வைப்பார். அறிவாற்றல் அறிவியலுடன் படைப்புக் கலைகளை உருவாக்கி இந்திய ராகங்களின் ஆழமான கட்டமைப்புகளை உருவாக்குவதை 100 ராகங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கும்'' என்றார்.

இதுகுறித்து ஐஐடி இயக்குநரும் பேராசியருமான வி.கே.திவாரி கூறும்போது, ''தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் அதன் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம். ஐஐடி காரக்பூரில் முதன்முதலாக பாரம்பரிய, நாட்டுப்புறக் கலைகளுக்கான கலைக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x