Published : 19 Aug 2020 11:31 AM
Last Updated : 19 Aug 2020 11:31 AM
அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.காம். பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, பொறி யியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது கடினம் ஆகியவற்றால் கலை, அறிவியல் கல்லூரிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பட்டப் படிப்பு முடித்து போட்டித் தேர்வு எழுதி அரசு வேலைக்குச் செல்லலாம் என நம்புகின்றனர். குறிப்பாக பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், பி.ஏ. ஆங்கிலம், தமிழ் இலக்கியம் படித்து, பி.எட். முடித்தால் அரசு, தனியார் பள்ளிகளில் வேலைக்குப் போகலாம் என மாணவிகளைப் பெற்றோர் தயார்படுத்துகின்றனர். இது போன்ற நம்பிக்கையால் இப்பாடப் பிரிவுகள் இவ்வாண்டு அதிக முக்கியத்துவம் பெற்றுள் ளன.
3 மடங்கு விண்ணப்பம்
கரோனா ஊரடங்கால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்வாண்டு ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 2 அல்லது 3 மடங்கு பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் குறிப்பாக பி.ஏ. ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்ஸி. கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அதிகமான விண்ணப்பங்கள் வந் துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அரசு உதவி பெறும் கல் லூரிகளில் பி.ஏ. ஆங்கில இலக் கியம், பி.காம். ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள், வேறு வழியின்றி சுய நிதிப் பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். அதிலும் மதிப் பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்ததால் பி.காம். போன்ற பாடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கட்டணம் அதி கரிப்பால் அரசு கல்லூரிகளை எதிர்பார்த்துள்ளனர். ஊரடங் கால் பொருளாதாரம் பாதித்துள் ளதால் பொறியியல் கல்லூரிகளில் சேரத் திட்டமிட்டவர்களும் கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் சாய்ந்ததால் விண்ணப்பித்தோர் அதிகரித்ததாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தியாகராசர் கல்லூரி முதல்வர் பாண்டிராஜன் கூறியதாவது: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித் தாலும், பி.காம்., பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், பி.ஏ. தமிழ், ஆங்கில இலக்கியம் பாடங்களுக்கான தேவை அதி கரித்துள்ளது.
எங்கள் கல்லூரி யில் பி.காம். ஹானர்ஸ், பி.பி.எஸ். போன்ற புதிய பாடப்பிரிவுகளிலும் மாண வர்களைச் சேர்த்துள்ளோம். ஊர டங்கால் பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தயா ராகி வருகிறோம் என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT