Published : 17 Aug 2020 09:45 AM
Last Updated : 17 Aug 2020 09:45 AM

இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்: அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா?

பண்ருட்டி அருகே தொரப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் ஆங்கில வழி அரசுப் பள்ளி (கோப்பு படம்).

விருத்தாசலம்

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசுப் பள்ளி களில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. ஆனால்பல அரசுப் பள்ளிகளில் அடிப் படை கட்டமைப்பு வசதி மேம்படுத் தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக சில அரசுப் பள்ளி ஆசிரியர்க ளிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

கரோனா பொதுமுடக்கத்தால் பல மாணவர்களின் பெற்றோர் வருவாய் இன்றி மிகுந்த மன உளைச்சலில் குடும்பம் நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் பயிலும் பல மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த முடியாத சூழலும் உள்ளது. எனவே இந்த ஆண்டு அரசுப் பள்ளியை நோக்கி அதிகளவு மாணவர்கள் வரும் சூழல் உள்ளது.

இத்தருணத்தில் பள்ளிகளில் முதலில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டிய கடமை பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது.ஸ்மார்ட் வகுப்பறை இருந்தால் தான் கியூ ஆர் கோடு உபயோகப் படுத்தி பாடம் நடத்த முடியும். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை. பள்ளி களில் ஆய்வகங்கள் இல்லை. ஆய்வகங்கள் இருந்தாலும் தேவையான பொருட்கள் இல்லாத நிலை உள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியும் நடத்தப்படுகிறது. ஆங் கில வழிக் கல்வி என்ற போதிலும் மாணவர்கள் அமர இருக்கைகள் இல்லை.

கரும்பலகை இல்லாத சூழலி லும் பாடம் நடத்தவேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது.இவற் றையும் களைந்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்கின்றனர் ஆசி ரியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x