Published : 17 Aug 2020 07:04 AM
Last Updated : 17 Aug 2020 07:04 AM
நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1.61 லட்சம்மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த ஜூலை 15-ம்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
கடந்த ஆண்டை விட அதிகம்
பொறியியல் கலந்தாய்வுக்கு 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். 2019-ம் ஆண்டில்1,33,116 மாணவர்கள் விண்ணப் பித்து இருந்தனர்.
ஆக.20-க்குள் சான்றிதழ் பதிவேற்றம்
பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான சம வாய்ப்பு எண்கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக கலந்தாய்வுக்குரியஇணையதளத்தில் சரிவர விண்ணப்பிக்க முடியவில்லை எனமாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT