Published : 31 Jul 2020 10:16 AM
Last Updated : 31 Jul 2020 10:16 AM
பிளஸ் 1 பொதுத்தேர்வில் அதிகபட்சமாக வேதியியல் பாடப்பிரிவில் 99.95% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654. பள்ளி மாணவ, மாணவிகளாக தேர்வெழுதியோர் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442. இதில், மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 881. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 561. பொது பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 424. தொழில் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 18.
இந்நிலையில், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 31) வெளியிட்டது. இதில், 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்
அறிவியல் பாடப்பிரிவுகள் - 96.33%
வணிகவியல் பாடப்பிரிவுகள் - 96.28%
கலை பாடப்பிரிவுகள் - 94.11%
தொழிற் பாடப்பிரிவுகள் - 92.77%
முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்
இயற்பியல் - 96.68%
வேதியியல் - 99.95%
உயிரியல் - 97.64%
கணிதம் - 98.56%
தாவரவியல் - 93.78%
விலங்கியல் - 94.53%
கணினி அறிவியல் - 99.25%
வணிக அறிவியல் - 96.44%
கணக்குப் பதிவியல் - 98.16%
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT