Published : 27 Jul 2020 07:50 PM
Last Updated : 27 Jul 2020 07:50 PM

சின்னாளபட்டியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய தனி ஒரு மாணவன்: கண்காணிப்புப் பணியில் மூவர் 

திண்டுக்கல் 

பிளஸ் 2 தேர்வு நடந்த திண்டுக்கல் மாவட்ட சின்னாளபட்டி பள்ளித் தேர்வு மையத்தில் தனியாக ஒரு மாணவன் மட்டும் தேர்வு எழுதினார். இவரை கண்காணிக்க 3 பேர் பணியில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.

திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், வத்தலகுண்டு ஆகிய நான்கு கல்வி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத 16 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில் 13 பேர் தேர்வு எழுதினர். 3 பேர் இந்தமுறையும் தேர்வு எழுதவில்லை.

வத்தலகுண்டு கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவன் மட்டும் தேர்வு எழுத மையம் தயார் செய்யப்பட்டது. முன்னதாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவன் முகமதுஅப்துல்ஹக்கீம் வேதியியல் தேர்வுஎழுதவந்தபோது விபத்தில் சிக்கியதில் கையில் முறிவு ஏற்பட்டது.

இதனால் தேர்வு எழுதமுடியவில்லை. இதையடுத்து மீண்டும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து இன்று தேர்வு எழுதினார்.

ஒரு மாணவனைக் கண்காணிக்கும் பணியில் வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு, கே.புதுக்கோட்டை அரசு பள்ளி தலைமையாசிரியரும் முதன்மை கண்காணிப்பாளருமான லெட்சுமணன், தேர்வு நடத்துனர் ராமலிங்கம் ஆகியோர் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x