Published : 16 Jul 2020 11:11 AM
Last Updated : 16 Jul 2020 11:11 AM

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்; மாவட்ட வாரியான தேர்ச்சி விகித விவரங்கள்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717. பள்ளி மாணவ,மாணவிகளாக தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 931.

இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 285. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 646. பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்து 516. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 415.

இந்நிலையில்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 16) அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதில், மாவட்ட அளவில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடத்திலும், 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு இரண்டாம் இடத்திலும், 96.39% தேர்ச்சி பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்

1. கன்னியாகுமரி - 95.06%

2. திருநெல்வேலி - 95.01%

3. தூத்துக்குடி - 94.84%

4. ராமநாதபுரம் - 93.12%

5. சிவகங்கை - 95.65%

6. விருதுநகர் - 96.26%

7. தேனி - 90.63%

8. மதுரை - 94.42%

9. திண்டுக்கல் - 93.13%

10. ஊட்டி - 93.13%

11. திருப்பூர் - 97.12%

12. கோயம்புத்தூர் - 96.39%

13. ஈரோடு - 96.99%

14. சேலம் - 92.38%

15. நாமக்கல் - 96.06%

16. கிருஷ்ணகிரி - 87.08%

17. தருமபுரி - 90.80%

18. புதுக்கோட்டை - 93.26%

19. கரூர் - 94.51%

20. அரியலூர் - 94.415

21. பெரம்பலூர் - 95.40%

22. திருச்சி - 95.94%

23. நாகப்பட்டினம் - 87.10%

24. திருவாரூர் - 88.45%

25. தஞ்சாவூர் - 92.89%

26. விழுப்புரம் - 86.98%

27. கடலூர் - 86.33%

28. திருவண்ணாமலை - 87.77%

29. வேலூர் - 87.42%

30. காஞ்சிபுரம் - 90.62%

31. திருவள்ளூர் - 91.16%

32. சென்னை - 93.45%

33. காரைக்கால் - 86.21%

34. புதுச்சேரி - 92.26%

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x