Published : 15 Jul 2020 05:20 PM
Last Updated : 15 Jul 2020 05:20 PM

கேரளாவில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 100% மதிப்பெண்கள் பெற்ற 234 மாணவர்கள்

கேரளாவில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், 234 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

கரோனா பெருந்தொற்றுக்கு நடுவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன. அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளித்தன. இதற்கிடையே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு கேரளா, பொதுத்தேர்வை நடத்தி முடித்தது.

இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதை மாநிலக் கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் வெளியிட்டார். இதில் 85.13 சதவீத மாணவர்கள் மொத்தமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 234 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேர்வின் அதிகபட்ச கிரேடு எண்ணான A+ ஐ 18,510 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் மாணவிகளே ஆவர். அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,234 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் உயரிய கிரேடு மதிப்பைப் பெற்றுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 114 பள்ளிகளில் 100 சதவீதத் தேர்ச்சி பதிவாகியுள்ளது. தேர்வு முடிவுகளை keralaresults.nic.in, results.kite.kerala.gov.in, dhsekerala.gov.in, kerala.gov.in and prd.kerala.gov.in ஆகிய தளங்களில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் ஜூலை மாதத்திலேயே வெளியாகும் என்றும் கேரளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x