Published : 10 Jul 2020 07:01 AM
Last Updated : 10 Jul 2020 07:01 AM
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை அக்டோபர் 20 வரை நீட்டித்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று இன்னும் கட்டுக் குள் வராததால் மாணவர் சேர்க் கைக்கான அவகாசத்தை நீட்டிக்க கல்லூரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று 3-வது முறையாக கல்வி ஆண்டு அட்டவணையில் திருத்தங்களை செய்து ஏஐசிடிஇ வெளியிட்டுள் ளது. அதன்விவரம்:
தொழில்நுட்பக் கல்லூரிகளுக் கான அங்கீகார நீட்டிப்பை ஆகஸ்ட் 15-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும். இதுதவிர பொறியியல் மாணவர் சேர்க்கைக் கான முதல்சுற்று கலந்தாய்வை அக். 5-க்குள் முடிக்க வேண்டும். மேலும், 2, 3-ம் சுற்று கலந்தாய்வை அக்.20-க்குள் முடிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் 2, 3, 4-ம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்க வேண்டும். தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்.15-ல் ஆரம்பிக் கப்பட வேண்டும்.
முதுநிலை பட்டய மற்றும் சான் றிதழ் படிப்புக்கான வகுப்புகளை ஜூலை 15-ல் தொடங்கலாம். இதற் கான மாணவர் சேர்க்கை பணி களை ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லூரிகள் வகுப்புகளை இணையவழியிலும் நடத்திக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT