Published : 03 Jul 2020 02:33 PM
Last Updated : 03 Jul 2020 02:33 PM
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பிற ஊழியர்களுக்கு ஜூலை 31 வரை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தேசியத் தேர்வுகள் முகமை மற்றும் பிற தன்னாட்சி பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் ஜூலை 31 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
இந்தச் சூழலில் ஆன்லைன் கற்றல் அல்லது இடைவெளியுடன் கூடிய கற்றலுக்கு அனுமதி நீட்டிக்கப்படுகிறது. ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பிற பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கல்விச் செயல்பாடுகளுக்காக இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பிற ஊழியர்களுக்கு ஜூலை 31 வரை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ''அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் இதே விதிகளைத் தங்களின் அதிகாரத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் பின்பற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்'' என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT