Published : 27 Jun 2020 11:50 AM
Last Updated : 27 Jun 2020 11:50 AM

ஒரு கையாலேயே மாணவர்களுக்கு மாஸ்க் தைத்துக் கொடுக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி

கர்நாடகாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி சிந்தூரி, ஒரு கையிலேயே மாணவர்களுக்கு மாஸ்க் தைத்துக் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 10 வயதுச் சிறுமி சிந்தூரி. இவருக்குப் பிறக்கும்போதே இடது முழங்கைக்குக் கீழே எந்தப் பகுதியும் வளர்ந்திருக்கவில்லை. எனினும் மனம் தளராத சிறுமி சிந்தூரி தன்னம்பிக்கையுடன் வளர்ந்தார்.

காலியன்பூரில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்புப் படித்து வருகிறார் சிந்தூரி. நன்கு படிக்கும் மாணவியாகத் திகழும் இவர், சாரணர் இயக்கத்திலும் உள்ளார். ஸ்கவுட் சார்பில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் தைத்துக் கொடுக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனது ஒரு கையாலேயே, மாணவர்களுக்கு மாஸ்க் தைத்துக் கொடுத்திருக்கிறார் சிந்தூரி. அவை பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நுலையில் சிந்தூரி தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனது உடல் குறைபாட்டைப் பலவீனமாக நினைக்காத சிறுமி சிந்தூரி, மாணவர்கள் பலருக்கு முன்னுதாரணமாக இருப்பதாக அவரின் ஆசிரியர்கள் பெருமை கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x