Published : 24 Jun 2020 06:46 AM
Last Updated : 24 Jun 2020 06:46 AM
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 24-ம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வை 8.35 லட்சம் மாணவர்கள் எழுதினர். கரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, மே 27-ல் தொடங்கி ஜூன் 10-ம் தேதி முடிவடைந்தது.
தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் 24-ல் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முடிந்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT