Published : 22 Jun 2020 12:31 PM
Last Updated : 22 Jun 2020 12:31 PM
இணைய வழியிலேயே மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க டெல்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 17-ம் தேதி முதல் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் கற்பித்தலை நிகழ்த்தி வருகின்றன.
அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை முழுவதையும் இணைய வழியிலேயே நடத்த முடிவெடுத்துள்ளது. மாணவர்கள் முன்பதிவு முதல் ஆவணங்கள் சரிபார்ப்பு வரை அனைத்தும் முதன்முதலாக இணையத்திலேயே நடைபெற உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான தேதி ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை நாளை (ஜூன் 23) நடைபெறும் இணையவழிக் கருத்தரங்கில் தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எச்டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. ஜூலை 4-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகுதிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவில் படிக்க இட ஒதுக்கீடு கோரும் மாணவர்கள், உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT