Published : 19 Jun 2020 07:23 AM
Last Updated : 19 Jun 2020 07:23 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’புடன் இணைந்து, ‘பிரபஞ்சத்தை அறிய இணைய சுற்றுலா’ எனும் ஆன்லைன் முகாமை பள்ளி முதல்வர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்காக வரும் 28–ம் தேதி நடத்துகிறது. இதன்மூலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அவர்களால் கற்பிக்க முடியும்.
ஊரடங்கு அமலில் இருக்கும்நிலையில், பள்ளி மாணவர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தமுகாம், பள்ளி மாணவர்களிடையேஅறிவியல் ஆர்வத்தைத் தூண்டி, விண்வெளி கல்வி எப்படியான பயனைத் தரும் என்பதை விளக்கும் வகையில் அறிவியல் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ளது.
பங்கேற்பு கட்டணம் கிடையாது
இதில், 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அறிவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பள்ளிமுதல்வர்களும் கலந்துகொள்ளலாம். பங்கேற்புக் கட்டணம் கிடையாது.
இந்த முகாம் வரும் 28-ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’நிறுவனரும் வானியல் பயிற்சியாளருமான வினோத்குமார் இம்முகாமை நடத்துகிறார். இவர், 13 ஆண்டுகளாக இத்தகைய பயிற்சிகளை வழங்கி வருவதோடு, ‘நாசா’வின் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
இதில் பங்கேற்க விரும்பும்பள்ளி முதல்வர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் https://connect.hindutamil.in/tourofuniverse.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT