Last Updated : 10 Jun, 2020 06:51 AM

 

Published : 10 Jun 2020 06:51 AM
Last Updated : 10 Jun 2020 06:51 AM

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; முன்கூட்டியே முடிவெடுத்திருக்கலாம்- சிரமங்களுக்குள்ளான ஆசிரியர்கள் கருத்து

விருத்தாசலம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அரசின் இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியே’ என்று கூறும் ஆசிரியர்கள், இதை முன்கூட்டியே அறிவித்திருந்தால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்காது என்கின் றனர்.

தென் மாவட்டங்களைக் காட்டிலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசுப் பள்ளி களின் எண்ணிக்கை அதிகம். இங்குள்ள பள்ளிகளில் அதிக பணியிடங்கள் காலியாக இருந் ததால், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர்.

இவர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், தற்போது அரசு பிறப்பித்த உத்தரவால், திடீரென புறப்பட்டு, மண்டலம் விட்டு மண்டலம் செல்ல வேண்டிய நிலை உருவானது. இதனால் அந்த ஆசிரியர்கள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு, பள்ளிக்கு வந்தனர். அந்தந்தப் பகுதியில் இயங்கி வந்த ஆசிரியர் களுக்கான விடுதிகள் அடைக்கப் பட்டிருந்ததால் தங்கும் இடமின்றி அலைக்கழிப்புக்கு ஆளாயினர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த பக்தவச்சலத்திடம் கேட்ட போது, அவர் கூறியது:

இப்பிரச்சினையில் ஆசிரியர் கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் வந்த ஆசிரியை ஒருவரை, காவலர்கள் அழைத்துச் சென்று, தனிமைப்படுத்தியுள்ளனர். அவர் அடையாள அட்டையைக் காண்பித்தும் விடவில்லை. தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சென்று, அவரை அழைத்து வந்தார்.

எங்கள் பகுதியான வேலூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 250 மாணவர்கள் தற்போது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், அவர்களுக்கு தேர்வை எப்படி நடத்துவது என்று கேட்ட போது, அவர்களுக்குத் தனியாக நடத்துவோம் என்றனர். இத்தகைய சிரமங்கள், குழப்பங்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அரசு சற்று யோசித்து முன்கூட்டியே இதுகுறித்து முடிவெடுத்து தீர்வு கண்டிருந்தால், இத்தகைய சிரமங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x