Last Updated : 08 Jun, 2020 01:02 PM

 

Published : 08 Jun 2020 01:02 PM
Last Updated : 08 Jun 2020 01:02 PM

சொந்த ஊரிலேயே தேர்வுக்கு விண்ணப்பிக்க வழி செய்யுங்கள்; புதுச்சேரி பல்கலை.யிடம் மாணவர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி

வெளிமாநில மற்றும் வெளிப் பிராந்திய மாணவர்கள் தங்களின் சொந்த ஊரிலேயே தேர்வுக்கு விண்ணப்பிக்க வழி செய்யக்கோரி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தை வலியுறுத்தி புதுச்சேரியில் போராட்டம் நடந்தது. அதற்கு புதுச்சேரி அரசும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சீராகாத நிலையில் புதுச்சேரியில் பொறியியல், மருத்துவம், சட்டம், நர்சிங் கல்லூரிகளுக்கான தேர்வை ஜூலையில் நடந்த முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பணம் கட்டவும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் இன்று மாணவர்கள் போராட்டம் காமராஜர் சிலையின் கீழ் நடந்தது.

இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரித் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் செயலர் விண்ணரசன், துணைத்தலைவர் கவியரசன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

நிர்வாகிகள் இதுதொடர்பாகக் கூறுகையில், கரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நிலையில் அவசரகதியில் தேர்வை நடத்த முடிவு எடுத்துள்ளனர். புதுச்சேரியில் படிக்கும் பலர் புதுச்சேரி மட்டுமில்லாது வெளி மாநிலங்களையும், இதர பிராந்தியங்களான காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். அவர்கள் புதுச்சேரி வந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பணம் கட்டுவது என்பது கடினமான பணி ஆகும். புதுச்சேரியில் பயிலும் காரைக்கால், மாஹே, ஏனாம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே தேர்வுக்கு விண்ணப்பிக்க வழி செய்ய வேண்டும்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மாநில அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல் அரசு உத்தரவுகளை மீறி பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் கட்டச்சொல்லி நிர்பந்திக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x