Published : 08 Jun 2020 12:50 PM
Last Updated : 08 Jun 2020 12:50 PM

11, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒருசேர எழுதும் மாணவர்கள்: கல்வித்துறை புதிய அறிவிப்பு

பிளஸ் 1 அரியர் தேர்வுகளையும், பிளஸ் 2 பொதுத் தேர்வையும் ஒருசேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தேர்வு மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 1 அரியர் பாடங்களை, தங்களது பள்ளிகளிலேயே மாணவர்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’கடந்த மாா்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதி மறு தேர்வு நடைபெறுகிறது. அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 16-ல் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே சில மாணவர்கள் ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிளஸ் 1 அரியா் பாடங்கள் மற்றும் பிளஸ் 2 மறு தேர்வு ஆகியவற்றை ஒருசேர எழுத உள்ளனர்.

இவ்விரு தேர்வுகளுக்கும் தரப்பட்ட ஹால் டிக்கெட்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில்தான் மாணவர்கள் தேர்வெழுத வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது மாணவர்களின் நலன்கருதி ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இவ்விரு தேர்வுளையும் ஒருசேர எழுதுபவர்கள் பிளஸ் 2 தேர்வை ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்திலும், பிளஸ் 1 அரியா் பாடத் தேர்வை தாங்கள் படிக்கும் பள்ளியிலும் எழுதலாம். இதுகுறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட மாணவா்களுக்குப் பள்ளித் தலைமையாசிரியா்கள் மூலம் உடனே தெரிவிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x