Published : 03 Jun 2020 07:29 PM
Last Updated : 03 Jun 2020 07:29 PM
மதுரையில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழக தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் ‘கரோனாவை வெல்வோம்’ எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 16 தீயணைப்பு நிலையங்களிலும் இன்று ஓவியப்போட்டி நடந்தது. 10 மற்றும் 15 வயதுக் குழந்தைகள் என, இரு பிரிவாகப் பிரித்து, போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் சிறந்த ஓவியங்களை வரைந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த 3 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தென் மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணக் குமார் பரிசுகளை வழங்கினார். மாவட்டத் தீயணைப்பு அதிகாரி கல்யாண குமார் உள்ளிட்ட நிலைய அலுவலர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT