Published : 03 Jun 2020 06:44 AM
Last Updated : 03 Jun 2020 06:44 AM
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசங்களையும் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வழியாக அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:பொதுத்தேர்வை நல்முறையில்நடத்த பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்படி பள்ளி வளாகத்தை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
இதுதவிர விடைத்தாளுடன் முகப்பு சீட்டை தைத்து தயாராகவைத்திருக்க வேண்டும். அதனுடன் கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் சிறப்பு உறைகளை மாவட்டதேர்வுத்துறை அலுவலகத்தில் முன்னரே பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல், மாணவர்களின் பழைய நுழைவுச்சீட்டையே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுழைவுச்சீட்டில் முதன்மை தேர்வுமையத்தின் பெயரும், தங்கள் பள்ளிகளின் பெயரும் இடம்பெற்றிருக்கும். எனவே, மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் பள்ளிகளின் விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். வேறு மாநிலம் மற்றும்மாவட்டங்களுக்கு சென்றமாணவர்கள் சொந்த இருப்பிடத்துக்கு திரும்பிவிட்டதை உறுதிசெய்ய வேண்டும்.
அதேபோல், மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும்போதே முகக்கவசமும் தரவேண்டும். 10-ம்வகுப்பு மாணவருக்கு 3 முகக் கவசமும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு தலா ஒரு முகக்கவசமும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT