Published : 02 Jun 2020 06:47 PM
Last Updated : 02 Jun 2020 06:47 PM
கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நூலகங்கள் மூடப்பட்டன.
2 மாதங்களுக்கு மேல் நூலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக நூலகங்களையும் திறக்க நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நூலகங்கள் நீண்ட நாட்களாக மூடப்பட்டு உள்ளதால் புத்தகங்கள், அலமாரிகள், மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவை தூசு படிந்துள்ளன. எனவே, நூலகங்களை தூய்மைப்படுத்தி, தயார் நிலையில் வைக்க பொது நூலகத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நூலுகங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தென்காசியில் உள்ள வ.உ.சி. வட்டார நூலகத்தில் இன்று நூல்கள் இருப்பு அறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, கணினி செயல்திறன் சோதிக்கப்பட்டது.
தென்காசி நகராட்சி மூலம் நூலகத்தில் வாசகர் பகுதி, நூல்கள் இருப்பு பகுதி, குறிப்புதவி பகுதி உள்ளிட்ட அனைத்து பிரிவுகள், தளவாடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நூலகத்தைத் தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், அறிவிப்பு வந்ததும் நூலகம் திறக்கப்படும் என்றும் வட்டார நூலகர் பிரம்மநாயகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT