Published : 31 May 2020 06:34 AM
Last Updated : 31 May 2020 06:34 AM

பிளஸ் 2-க்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்?- ‘இந்து தமிழ் திசை’யின் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

சென்னை

பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம் என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ இணைய வழி ஆலோசனை நிகழ்ச்சி இன்று (மே 31) தொடங்குகிறது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி மாணவர்களுக்காக வானியல் முகாம், அபாகஸ் முகாம், விவசாய முகாம் (லிட்டில் ஃபார்மர்), எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரையாடல் என பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையே, அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கும் விதமாக ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆலோசனை நிகழ்ச்சியை இணையத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இன்று முதல் தொடர்ந்து வழங்க உள்ளது.

இத் தொடர் கூட்டத்தின் முதல்அமர்வு இன்று (மே 31) மாலை 4 முதல் 6 மணி வரை நடக்கிறது. இதில், ‘உயர்வுக்கு வேளாண் கல்வி’ எனும் தலைப்பில் வேளாண்மைக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், வேளாண்மை உற்பத்தி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, விஐடி பல்கலை.வேந்தர் கோ.விசுவநாதன், அமிர்தா ஸ்கூல்ஆஃப் அக்ரிகல்சரல் சயின்ஸின் தலைமை ஆராய்ச்சியாளர், பேராசிரியர் மற்றும் முதுகலை திட்ட தலைவரான டாக்டர் சுதீஷ் மனலில் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இதில் பங்கேற்க மாணவ, மாணவிகள் ரூ.99 பதிவுக் கட்டணம் செலுத்தி, http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவுசெய்து, 2 மாத ‘இந்து தமிழ்’ இ-பேப்பரை இலவசமாகப் பார்க்கலாம். மேலும் தகவல் பெற9840961923, 8870260003, 9003966866எண்களில் தொடர்பு கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x