Published : 11 May 2020 07:04 AM
Last Updated : 11 May 2020 07:04 AM
நடப்பு ஆண்டு குரூப் 1 உட்படஅரசுப் பணிகளுக்கான அனைத்துபோட்டித் தேர்வுகளும் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஓய்வுபெறும்வயது 59-ஆக நீட்டிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து அடுத்த ஓராண்டுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்சிபிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் நடைபெற வாய்ப்பில்லை என பல்வேறு தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவுகின்றன. இது தேர்வர்கள் மத்தியில் குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வாணைய செயலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் போட்டித்தேர்வுகள் ரத்து என்பது தவறானதகவல்.
எவ்வித பாதிப்பும் ஏற்படாது
ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான காலஅட்டவணைப்படி அரசு் பணிக்கான குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். அடுத்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பணியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு கால அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும். எனவே,நடப்பு ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT