Last Updated : 27 Apr, 2020 06:07 PM

 

Published : 27 Apr 2020 06:07 PM
Last Updated : 27 Apr 2020 06:07 PM

கரோனா தடுப்புப் பணியில் என்சிசி மாணவர்கள்: மதுரையில் 100-க்கும் மேற்பட்டோர் களமிறங்கினர்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரையில் கரோனா தடுப்புப் பணியில் போலீஸாருடன் இணைந்து, 100-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் போலீஸார் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் பணிபுரிகின்றனர்.

மதுரை நகரில் போலீஸார், ஊர்க்காவல் படை யினர், தன்னார்வலர்களை இணைத்துக் கொண்டும் தொற்று தடுப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

கரோனா தடுப்புப் பணியில், ஆர்வமுள்ள கல்லூரி என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் தன்னார்வலர்களாக இணைந்து செயல்படலாம் என, காவல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை தியாகராசர் பொறியியல், கலை, அறிவி யல் கல்லூரிகள், அமெரிக்கன் கல்லூரி, யாதவர், லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 111 மாணவர்கள் தன்னார்வலர்களாக பணிபுரிய முன்வந்தனர்.

அவர்களுக்கு கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, கூடல்நகர், திருமங்கலம் போன்ற பகுதியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 4 மணி வரை போலீஸாருடன் இணைந்து வாகனத் தணிக்கை உள்ளிட்ட கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு தேவையான முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் பணியை தேசிய மாணவர் படை அலுவலர்கள் காட்வின், பிரின்ஸ், வினோத், ஜூனியர் காமாண்டர்கள் சியாம், சுகேஷ் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x