Published : 25 Apr 2020 04:28 PM
Last Updated : 25 Apr 2020 04:28 PM

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம்: விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெற, இணைய முறையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் (சிபிஎஸ்இ) நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் அனைத்தும் தொடர்ந்து இயங்க ஆண்டுதோறும் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும். இதற்காக சிபிஎஸ்இ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரை அங்கீகாரம் பெற பள்ளிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் பெரும்பாலான பள்ளிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் இருந்தன. இதனால் விண்ணப்பிக்கும் கால அவகாசம் மாா்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பீதி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x