Published : 20 Apr 2020 03:19 PM
Last Updated : 20 Apr 2020 03:19 PM
'கரோனாவை எதிர்க்கும் இந்தியா' என்ற மையக் கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான விஸ்வகர்மா விருதுகள் வழங்கப்படும் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
வெவ்வேறு தளங்களில் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எளிய முறையில், குறைந்த விலையில் கண்டறியும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் விஸ்வகர்மா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மையக்கருத்தாக 'கரோனாவை எதிர்க்கும் இந்தியா' என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கரோனா வைரஸ் பரவலைக் குறைத்தல், விழிப்புணர்வுத் திட்டங்கள், இலவச ஆலோசனை, சானிடைசர்கள், முகக் கவசங்களை வழங்குதல், தங்குமிடம் / உணவு ஆகியவற்றின் மூலம் ஊரடங்கு நேரத்தில் சமூகத்துக்கு உதவுதல், விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தல், ஆன்லைன் வகுப்புகளுக்காக இ-பாடங்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டவர்கள் விருதுக்காக விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை அளிக்க மே 30 கடைசித் தேதி ஆகும். எனினும் ''இந்த விருதுகள் நிச்சயம் ஒரு போட்டி அல்ல. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து உற்சாகப்படுத்தும் ஒரு முயற்சியே'' என்றும் ஏஐசிடிஇ தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் விவரங்களை அறிய: https://www.aicte-india.org/AICTE%20Vishwakarma%20Award%202020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT