Published : 18 Apr 2020 04:41 PM
Last Updated : 18 Apr 2020 04:41 PM
ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்தக் கட்டாயப் படுத்தக்கூடாது என்று ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
பொறியியல், மேலாண்மை, கட்டிடக்கலை மற்றும் ஃபார்மசி படிப்புகளுக்குக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தக்கூடாது என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்:
''பொறியியல், மேலாண்மை, கட்டிடக்கலை மற்றும் ஃபார்மசி படிப்புகளுக்குக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தக்கூடாது.
அதேபோல ஆசிரியர்களுக்கான ஊதியத் தொகையும் நிறுத்தி வைக்கப்படக்கூடாது.
அனைத்துக் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் இணைய தளத்திலும் அறிவிப்புப் பலகையிலும் இதைத் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் வரும் போலி செய்திகளை நம்பக்கூடாது.
ஏஐசிடிஇ, யுஜிசி மற்றும் மனிதவள அமைச்சகத்தின் வலைதளங்களில் வரும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும்.
இன்டர்ன்ஷிப் படிப்பை முடிக்காத மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் படிக்கலாம்.
ஆன்லைன் மற்றும் செமஸ்டர் தேர்வுக்கான பட்டியலை யுஜிசி குழு தயாரித்துவருகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுத் தேர்வு நடத்தப்படும்''.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT